» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இந்தியாவுக்குப் பதிலாக பாரத் : என்சிஇஆர்டி குழு பரிந்துரை

புதன் 25, அக்டோபர் 2023 5:20:46 PM (IST)

பள்ளி பாடப்புத்தகங்களில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்' என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) குழு பரிந்துரைத்துள்ளது.

கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் விருந்துக்கான அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவா்’ என்பதற்குப் பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவா்’ என அச்சிடப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அதுபோல, இந்தோனேசியா தலைநகா் ஜகாா்தாவில் நடைபெற்ற 20-ஆவது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமா் மோடியின் நிகழ்ச்சி நிரலில் 'இந்திய பிரதமர்' என்பதற்கு பதிலாக 'பாரத பிரதமர்' என்று அச்சிடப்பட்டது.  இந்தியாவை 'பாரதம்' என பெயர் மாற்றம் செய்வதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். 

இந்நிலையில், சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்' என பெயர் மாற்றம் செய்ய தற்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும், 'பண்டைய வரலாறு' (Ancient History) என்பதற்குப் பதிலாக 'பாரம்பரிய வரலாறு' (Classical History) என்று மாற்றவும் என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அந்த குழுவின் தலைவர் சி.ஐ. ஐசக் தெரிவித்துள்ளார். அதுபோல வரலாறுகளில் தோல்விகள் குறித்து அதிகம் குறிப்பிடுவதற்குப் பதிலாக இந்துக்களின் வெற்றிகள் குறித்து அதிகம் இடம்பெற வேண்டும் என்றும் இந்திய அறிவு முறைக்கு (Indian Knowledge System) முக்கியத்துவம் கொடுக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory