» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது!

சனி 30, செப்டம்பர் 2023 11:57:23 AM (IST)

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது.

இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். இதற்காக வங்கிகள் சிறப்பு கவுண்ட்டர்களையும் திறந்திருந்தன. இந்த நிலையில் நாட்டில் புழக்கத்திலிருந்த 93 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக கடந்த 1-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கிடையே ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்கினால் அவற்றை வாங்க வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அவ்வாறு மீறி வாங்கினால் அதற்கு கண்டக்டர்களே முழு பொறுப்பாவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல், சினிமா தியேட்டர்கள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. இன்றுடன் காலக்கெடு முடிவடைவதால், இன்னும் காலநீட்டிப்பு செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.


மக்கள் கருத்து

கந்தசாமிSep 30, 2023 - 12:38:27 PM | Posted IP 172.7*****

விரைவில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரும் என்று தெரிகிறது ஐய்யாயிரம் நோட்டுகள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory