» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)
மதுபான மோசடி வழக்கில், கைதான டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுடெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து, மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா பிறப்பித்த உத்தரவு: மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு நிராகரிக்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. மனுதாரர் செல்வாக்குமிக்கவர் என்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










