» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.92 குறைப்பு: இன்று முதல் அமல்

சனி 1, ஏப்ரல் 2023 11:45:45 AM (IST)

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது சிலிண்டர் விலையை உயர்த்தியும், குறைத்தும் அறிவிக்கின்றன. 

இந்த அறிவிப்புகள் மாதத்தின் முதல் நாளில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இன்று (ஏப்ரல் 1) வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியலின்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை முன்பிருந்ததைவிட ரூ.92 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.2028, கொல்கத்தாவில்  ரூ.2132, மும்பையில்  ரூ.1980, சென்னையில் ரூ.2192.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory