» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நான் தப்பி ஓடவில்லை, விரைவில் உலகின் முன் தோன்றுவேன் - அம்ரித்பால் சிங்

வெள்ளி 31, மார்ச் 2023 4:54:18 PM (IST)

"நான் தப்பி ஓடவில்லை,  விரைவில் உலகின் முன் தோன்றுவேன்" என்று காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் 'அனந்த்புர் கல்சா ஃபவுஜ்'என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த 18-ம் தேதி முதல் அம்ரித்பால் சிங் பல்வேறு வேடங்களில் சாலை, தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அம்ரித்பால் சிங் மீது உள்ள வழக்குகள் காரணமாக அவரை போலீசார்ர் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்ட அம்ரித்பால் சிங், அதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நான் தப்பி ஓடிவிட்டேன். எனது சகாக்களை நான் விட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களின் நினைப்பு தவறு. இது ஒரு மாயை. இதனை உண்மை என்று நம்ப வேண்டாம். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. விரைவில் உலகின் முன் தோன்றுவேன். தனியாக அல்ல; ஆதரவாளர்களோடு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து, அவர் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலிலோ அல்லது பத்திண்டாவில் உள்ள குருத்வாராவிலோ தோன்றக் கூடும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக, இந்த இரண்டு பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஆம்Mar 31, 2023 - 06:01:19 PM | Posted IP 162.1*****

மீண்டும் ஜெயிலில் தோன்றுவாய்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory