» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவிலில் கிணறு படிக்கட்டு இடிந்து 12பேர் பலி - ராமநவமி கொண்டாட்டத்தில் சோகம்!

வியாழன் 30, மார்ச் 2023 4:45:26 PM (IST)



இந்தூர் கோவிலில் கிணறு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக ஆட்சியர் இளையராஜா தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென படிக்கட்டுகள் மளமளவென சரிந்து கீழே விழுந்தது. படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்ததனர். கிணற்றின் படிக்கட்டு இடிந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். கிணறு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர்.

இந்த விபத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 30-35 பக்தர்கள் கிணற்றில் விழுந்தனர் என்று நேரில் பார்த்த சாட்சிகளை மேற்கோள் காட்டி இந்தூர் காவல்துறை ஆணையர் மக்ரந்த் தியோஸ்கர் தெரிவித்தார். இந்தூர் கோவிலில் கிணறு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக ஆட்சியர் இளையராஜா தெரிவித்துள்ளார்.  ராம நவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டின் போது விபத்து நேரிட்டது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

மக்கள்Mar 30, 2023 - 06:48:37 PM | Posted IP 162.1*****

தொகை பெருத்து விட்டது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory