» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 843 பேருக்கு கரோனா: மத்திய சுகாதாரத் துறை தகவல்!

சனி 18, மார்ச் 2023 3:30:37 PM (IST)

இந்தியாவில் ஒரே நாளில் 843 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 843 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 126 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு நாளின் பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ கடந்துள்ளது.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு மரணமும், கேரளாவில் இரண்டு மரணமும் பதிவாகியுள்ளன. கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 58 ஆயிரத்து161 ஆக உள்ளது. கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 799 ஆக உள்ளது. இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.64 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory