» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டைப் பற்றி தரக்குறைவாக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்

வியாழன் 16, மார்ச் 2023 4:10:09 PM (IST)

நாட்டைப் பற்றி தரக்குறைவாக எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

புது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து நான் பேசியதில் ஆட்சேபத்துக்குரியது எதுவும் இல்லை. ஆனால், அதானி குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசியது முழுவதும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. லண்டனில் பேசியது குறித்து நான் முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதற்காக மக்களவையில் பேச வாய்ப்பு கேட்டும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று நான் மக்களவைத் தலைவரிடம் கோரினேன். என் மீது நான்கு அமைச்சர்கள் புகார் கூறியிருக்கிறார்கள். எனவே, அதற்கு பதிலளிப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் எனது விளக்கத்தை முதலில் நாடாளுமன்றத்தில்தான் அளிக்க வேண்டும். அதன்பிறகுதான் ஊடகங்கள் முன் விளக்க வேண்டியது அவசியம். வெள்ளிக்கிழமையாவது என்ன மக்களவையில் பேச அனுமதிப்பார்களா என்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. அதானி குழுமம் பற்றி, நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய பல கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory