» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இனி டாலர் தேவையில்லை! 18 நாடுகளுடன் இந்திய ரூபாயில் இறக்குமதி!! - ஆர்பிஐ ஒப்புதல்!

வியாழன் 16, மார்ச் 2023 11:39:37 AM (IST)

இந்திய ரிசர்வ் வங்கி 18 நாடுகளை சேர்ந்த வங்கிகளுக்கு இந்தியாவில் Vostro கணக்குகளை திறக்க ஒப்புதல் அளித்துள்ளது, இதன் மூலம் இந்திய இறக்குமதியாளர்கள் டாலர், யூரோ போன்ற நாணயங்கள் அல்லாமல் இந்திய ரூபாயிலேயே வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பேமெண்ட் செய்ய முடியும்.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு வெளிநாட்டு பேமெண்ட்-களை ரூபாயில் செலுத்தும் கட்டமைப்பை உருவாக்க உள்ளதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய 18 நாடுகளின் வங்கிகளுக்கு இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி இதுவரையில் இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க 18 நாடுகளை சார்ந்து சுமார் 60 ஒப்புதல்களை வெளிநாட்டு வங்கிகளுக்கு அளித்துள்ளது என செவ்வாய்க்கிழமை மத்திய நிதிதுறையை சேர்ந்த மாநில அமைச்சர் பகவத் கார்ட் நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்தார்.

பிப்ரவரி 2022ல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு பெரிய பாதிப்பை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பாதிப்பை வர்த்தக சந்தை, பொருளாதாரம், விலைவாசியிலும் எதிர்கொண்டது. இந்த நிலையில் இந்திய ரூபாய் அடைப்படையிலான பேமெண்ட் முறையை கொண்டு வந்தது.

இந்த கட்டமைப்பு மூலம் குளோபல் டிரேட்-க்கு ஊக்கம் அளிப்பது மட்டும் அல்லாமல் உலகளவில் ரூபாய்க்கான டிமாண்ட் அதிகரிக்கும். இதன் மூலம் ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் உயரும். இந்திய ரூபாய் அடைப்படையிலான பேமெண்ட் முறையின் கீழ் அனைத்து ஏற்றுமதி, இறக்குமதியின் பில்-களை ரூபாய் அடிப்படையிலேயே செய்ய முடியும்.

உதாரணமாக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் இரு நாடுகளின் நாணய மதிப்பீட்டில் ரூபாய் மதிப்பை கணக்கிட்டு பில் செய்ய வேண்டும். இதற்கு இறக்குமதியாளர்கள் ரூபாய் வடிவிலேயே பேமெண்ட் செய்வார்கள்.

இதை செயல்படுத்த தான் வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் Special Rupee Vostro accounts திறக்க வேண்டும். இதற்கு தான் ஆர்பிஐ 18 நாடுகளை சேர்ந்த வங்கிகளுக்கு சுமார் 60 ஒப்புதல்களை அளித்துள்ளது, இதன் மூலம் இனி வெளிநாட்டு வர்த்தகத்திற்கு டாலருக்கு ரூபாயை மாற்ற தேவையில்லை, இதற்காக எக்ஸ்சேஞ்ச் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

பிப்ரவரி மாதம் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் Rosbank, Tinkoff Bank, Centro Credit Bank மற்றும் Credit Bank of Moscow உட்பட 20 ரஷ்ய வங்கிகள் இந்தியாவில் Vostro கணக்குகளை திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதேவேளையில் பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த கச்சா எண்ணெய் வரலாற்று உச்சத்தை தொட்டது.


மக்கள் கருத்து

JAI HINDMar 16, 2023 - 03:50:25 PM | Posted IP 162.1*****

GREAT ACHIEVEMENT BY BJP MODIJI GOVERNMENT....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory