» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரிஷப்ஷனிஸ்ட் கொலை: கைது செய்யப்பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட் இடிப்பு!
சனி 24, செப்டம்பர் 2022 12:36:58 PM (IST)

உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொலை வழ்ககில் பாஜக தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ரிசார்ட் முதல்வர் புஷ்கர் தாமி உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா பவுரி மாவட்டத்தில் ரிஷிகேஷ் அருகே வனாந்த்ரா என்ற ஓய்வு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இந்த உணவு விடுதியில் அன்கிதா பண்டாரி என்ற 19 வயது பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த திங்கள் கிழமை அன்கிதா காணாமல் போனதாக புல்கித் ஆர்யாவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கால்வாய் ஒன்றில் இருந்து அன்கிதா பண்டாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி சமூகவலைதளங்களில் நேற்று வைரலானதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை விரைவு படுத்தினர். விசாரணையில் அன்கிதாவின் கொலையில் அவர் வேலை பார்த்த விடுதியின் முதலாளியான புல்கித் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக புல்கித் ஆர்யா, அவரது விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதற்கிடையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புல்கித் ஆர்யாவிற்கு சொந்தமான வனாந்த்ரா ஓய்வு விடுதியை இடிக்க மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். மேலும் மாநிலத்தில் உள்ள மற்ற ஓய்வு விடுதிகளிலும் விசாரணை நடத்த மாவட்ட நீதிபதிகளை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுமிகவும் துரதிர்ஷ்டமான சம்பவம், கொடுமையான குற்றம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.
கொலை குற்றத்தில் கைதாகியுள்ள புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யா தற்போது மாநிலத்தில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். முன்னதாக மாநில அமைச்சராக இருந்த அவர் மண்பாண்ட வளர்ச்சிக்காக அமைப்பட்ட உத்தரகாண்ட் மாநில மட்டி கலா போர்டின் தலைவராக இருந்தார். புல்கித் ஆர்யாவின் சகோதரர் அன்கித் ஆர்யாவும் பாஜக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்
செவ்வாய் 28, நவம்பர் 2023 12:42:07 PM (IST)

உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை மீட்க சுரங்கம் தோண்டும் நிபுணர்கள் வருகை
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:26:28 AM (IST)

சுகாதார நல மையங்கள் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய மந்திர் என்று பெயர் மாற்றம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:18:11 AM (IST)

குஜராத்தில் இடி - மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழப்பு: 71 கால்நடைகள் பலி!
திங்கள் 27, நவம்பர் 2023 5:54:28 PM (IST)

கணவரின் காதை கடித்து துப்பிய மனைவி: குடும்பத் தகராறில் வெறிச்செயல்
திங்கள் 27, நவம்பர் 2023 5:51:01 PM (IST)

தோல்வி பயத்தால் சந்திரசேகர ராவ் 2 தொகுதிகளில் போட்டி : பிரமர் மோடி பேச்சு
திங்கள் 27, நவம்பர் 2023 10:07:31 AM (IST)

GD bddndnSep 24, 2022 - 01:32:57 PM | Posted IP 162.1*****