» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பு: நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் சம்மன்!

வியாழன் 25, ஏப்ரல் 2024 12:23:44 PM (IST)

ஃபேர்பிளே செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

ஃபேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னா ஆஜராக மகாராஷ்டிரா சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது. 2023ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில், நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், நடிகை தமன்னா நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தமன்னா ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக viacom சார்பில் புகார் எழுப்பப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 29ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory