» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடம் : இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது!

சனி 3, செப்டம்பர் 2022 11:38:47 AM (IST)

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

சர்வதேச நிதியம், வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பீட்டு அளவில் எடுத்த பொருளாதார வளர்ச்சிக் கணக்கீட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக ஆசியாவின் பவர்ஹவுஸ் என்று அறியப்படும் இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 இன் கடைசி மூன்று மாதங்களில் நாடு ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது, இங்கிலாந்தை ஆறாவது இடத்திற்குத் தள்ளியது. பொருளாதாரத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும், முதலாவது 2019 இல் இதுபோல் பின்னுக்கு தள்ளி இருந்தது.

புளூம்பெர்க் அறிக்கையின்படி, மார்ச் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் அளவு ரொக்கமாக 854.7 பில்லியன் டாலராகும் ஆகும். மாறாக, இங்கிலாந்தின் அதே அளவு 814 பில்லியன் டாலராகும் ஆகும்

நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக சரியும் என சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம், வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, சமச்சீரற்ற பருவநிலை மற்றும் சர்வதேச வளர்ச்சியில் மந்தநிலை போன்ற காரணங்களால் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்பு கணிக்கப்பட்டதைவிட குறையும் என்பது தற்போதைய மதிப்பீட்டின் மூலமாக தெரியவந்துள்ளது.

அதன்படி, முன்பு 8.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தற்போது 1 சதவீதம் குறைந்து 7.7சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் ஆட்சித் தலைமை மாறவுள்ள சூழலில் இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சி புதிதாக பொறுப்பேற்கும் பிரதமருக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இங்கிலாந்து கடந்த 40 ஆண்டுகளாக மிக வேகமாக உயரும் பணவீக்கப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு 2024 வரை தொடரும் என அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஆம்Sep 5, 2022 - 08:55:44 PM | Posted IP 162.1*****

திராவிட குடும்ப ஆட்சி இருந்திருந்தால் நாட்டில் அந்த குடும்பமே வளர்ச்சி அடைந்து இருக்கும்

இந்தியன்Sep 3, 2022 - 03:23:00 PM | Posted IP 162.1*****

மோடிஜி அவர்களை குறை சொல்லும் உபிஸ் களே இதை நன்றாக படியுங்கள். இன்றய இந்தியாவின் வளர்ச்சி பிஜேபி ஆட்சியால்தான் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory