» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவோம்: நிர்மலா சீதாராமன்

வெள்ளி 26, ஏப்ரல் 2024 3:57:32 PM (IST)

"காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் சம்பாதித்ததில் 90 சதவீதத்தை வரியாக செலுத்தினார்கள். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவோம்.” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை சாடியுள்ளார்”

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு தொடங்கியது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு (பிஈஎஸ்) BEs கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிகப்படியான மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். மக்கள் நிலையான ஆட்சி அமைய விரும்புகிறார்கள். அவர்கள் சிறந்த கொள்கைகள், வளர்ச்சி, முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

1968 -க்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் தங்களது சொத்தில் இருந்து 18 முதல் 20 சதவீதம் வைப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. பல நேரங்களில் அந்த பணம் திருப்பி தரப்படாமல் போனது. அதற்கு சரியான விளக்கங்களும் தரப்படமாலும் இருந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் சம்பாதித்ததில் 90 சதவீதத்தை வரியாக செலுத்தினார்கள். அதெல்லாம் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியாது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவோம்.

பரம்பரை வரியானது நடுத்தர வகுப்பினரையும், பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களையும் நேரடியாக பாதிக்கிறது. பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற எதையும் பேசாமல், பிரதமர் மோடியை காங்கிரஸ் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் தாக்கி பேசி வருகிறது. காங்கிரஸிடம் நல்ல அஜெண்டா ஏதுவுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

MAKKALApr 27, 2024 - 03:45:13 PM | Posted IP 162.1*****

காங்கிரஸ் ஆட்சி ---அது இந்த ஜென்மத்தில் நடக்காது.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory