» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாணவர்கள்!

புதன் 31, ஆகஸ்ட் 2022 4:53:41 PM (IST)



ஜார்கண்ட் மாநிலத்தில், குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில்,  சமீபத்தில் தேர்வு நடைபெற்றுள்ளது. அதில், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்களை வழங்கியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதற்கு சரியாக பதிலளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.  பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலில், காயமடைந்த ஆசிரியர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


மக்கள் கருத்து

gh gdjdbSep 2, 2022 - 04:28:17 PM | Posted IP 196.2*****

இன்னும் ரெண்டு நாள்ல ஆசிரியர் தினம். இதுல இது வேற

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory