» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்த அதானி : ஆசியாவில் முதல்முறை!!

செவ்வாய் 30, ஆகஸ்ட் 2022 4:45:54 PM (IST)

உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 3வது இடத்தை பிடித்துள்ளார். ஆசியாவை சேர்ந்த ஒருவர் 3வது இடத்திற்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

ப்ளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் 251 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்து அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பெஜோஸ் 153 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இதற்கு அடுத்து 3வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 137 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார். இவர், பிரான்சை சேர்ந்த லூயி உய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, சீனாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஜாக் மா உள்ளிட்ட ஆசிய பணக்காரர்கள் கூட இதுவரை 3வது இடத்தை பிடித்தது கிடையாது.

அதானி குரூப் நிறுனத்தின் துணை நிறுவனராக கவுதம் அதானி உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கியமான துறைமுகங்களை இந்த நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. நிலக்கரி வணிகத்திலும், இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 31 அன்றுடன் முடிவடைந்த ஆண்டில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் 5.3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதானி, நிலக்கரி சுரங்கம் துணைமுகங்கள் மட்டுமல்லாது, சிமென்ட், மின்சாரம், விமான நிலையங்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிAug 30, 2022 - 07:02:54 PM | Posted IP 162.1*****

1. 20 , 30 வருடங்களாக டாட்டா பிர்லா அம்பானி போன்ற தொழில் அதிபர்களை நாம் கேள்வி பட்டுள்ளோம் அவர்கள் எல்லாரையும் விட இவர் இவ்வளவு மிக விரைவாக உலக மூன்றாவது பணக்காரர் என்ற பிடித்தார் என்றால் அதற்கு யார் காரணம் 2014 முன் இவர் எந்த வரிசையில் இருந்தார் 2. உலக பணக்காரன் என்ற நிலைக்கு போயிடுவான். நாட்டு மக்களை வதைத்து, சுரண்டி, வயிற்றிலடித்து சுருட்டிக்கொண்டிருக்கும் மிக மோசமான கும்பலின் கையில் நாடு சிதைந்துகொண்டுள்ளது. இலங்கை போல நாட்டு மக்கள் வெகுண்டு எழும் நாள் தொலைவில் இல்லை.... 3, எட்டு வருஷம்மா மத்திய அரசின் கடினமான உழைப்பு......சாதனை இது..போதாதா...ஏழைகள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory