» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராக்கெட்ரி படத்தில் 90 சதவீதம் தவறான தகவல்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் விளக்கம்

வியாழன் 25, ஆகஸ்ட் 2022 12:26:22 PM (IST)

ராக்கெட்ரி படத்தில் கூறப்பட்ட 90 சதவீத தகவல்கள் பொய்யானவை' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் கூறினர்.

இஸ்ரோவில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன் (81), தேசத் துரோக வழக்கில் 1994ல் கைது செய்யப்பட்டு பின் குற்றமற்றவர் என 1998ல் விடுதலை செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு தொடர்பாக ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட் என்ற பெயரில், பிரபல நடிகர் மாதவன் சினிமா தயாரித்துள்ளார். இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவனே நடித்துள்ளார்.

இந்த சினிமா குறித்து, இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் ஏ.இ.முத்துநாயகம், இ.வி.எஸ்.நம்பூதிரி, டி.சசிகுமாரன் ஆகியோர் நேற்று கூறியதாவது: விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் 90 சதவீதம் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இஸ்ரோவில் பணியாற்றி, ஜனாதிபதியாகவும் பதவி வகித்த அப்துல் கலாமின் தவறை திருத்தியதாக கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல்.

அதேபோல், தான் கைது செய்யப்பட்டதால்தான் இந்தியாவுக்கு கிரையோஜெனிக் தொழில் நுட்பம் தாமதமாக கிடைத்தது என்றும் முற்றிலும் ஆதாரமற்ற தகவலை இந்த சினிமாவில் கூறியுள்ளனர். நாராயணனுக்கும் கிரையோஜெனிக் திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து

ஆம்Aug 25, 2022 - 01:40:48 PM | Posted IP 162.1*****

சினிமா பயித்தியங்கள் எல்லாம் முட்டாள்

kumarAug 25, 2022 - 01:07:07 PM | Posted IP 162.1*****

nalla manitharai thesa throga valakkil kaithu seythu siththiravathai seythargale athu unmai thane?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory