» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் தைவானை சீனாவிடம் விட்டுக் கொடுத்தோம்: சு.சுவாமி

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 11:43:13 AM (IST)

முன்னாள் பிரதமர்களான நேரு மற்றும் அடல் வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் திபெத்தையும் தைவானையும் சீனாவின் ஒரு பகுதியாக இந்தியர்கள் ஒப்புக்கொண்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான  சுப்பிரமணியன் சுவாமி புதன்கிழமை, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரை விமர்சித்துள்ளார், மேலும் அவர்களின் முட்டாள்தனத்தால் திபெத் மற்றும் தைவானை சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்தியர்கள் ஒப்புக்கொண்டர் என்று கூறினார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் முட்டாள்தனத்தால் திபெத்தையும், தைவானையும் சீனாவின் ஒரு பகுதி என்று இந்தியர்களாகிய நாம் ஒப்புக்கொண்டோம். ஆனால் இப்போது சீனா பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்ஏசியை மதிப்பதில்லை மற்றும் லடாக்கின் சில பகுதிகளை கைப்பற்றியது. யாரும் வரவில்லை என்று மோடி மயக்கத்தில் இருக்கிறார். நாம் முடிவு செய்ய தேர்தல்கள் உள்ளன என்பதை சீனா தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

சீனாவின் பலமுறை 'எச்சரிக்கைகளை' மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றிருந்த நிலையில் சுவாமியின் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

ஆம்Aug 5, 2022 - 06:35:16 PM | Posted IP 162.1*****

அப்போ கச்ச தீவு திமுக-காங்கிரஸ் முட்டாள்தனத்தால் தான் நடந்தது தானே

truthAug 4, 2022 - 12:53:34 PM | Posted IP 162.1*****

moottal paesugiran kaelungal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory