» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குஜராத் உப்பு ஆலையில் சுவர் இடிந்து 12பேர் பலி: பிரதமர் இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
புதன் 18, மே 2022 5:10:25 PM (IST)

குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ள சாகர் உப்பு தொழிற்சாலையில் உப்பு நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மோர்பியில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சோகம் நெஞ்சைப் பிளக்கிறது.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. மோர்பியில் ஏற்பட்ட சோகத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று அவர் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை: திருவனந்தபுரம் அருகே சோகம்!
சனி 2, ஜூலை 2022 5:46:56 PM (IST)

டெல்லியில் இருந்து ஜபல்பூர் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை: பயணிகள் பீதி!!
சனி 2, ஜூலை 2022 4:48:33 PM (IST)

உதய்பூர் படுகொலையில் கைதானவர் பாஜக உறுப்பினர்: காங்கிரஸ் புகார் - பாஜக மறுப்பு!
சனி 2, ஜூலை 2022 3:44:12 PM (IST)

அக்னிபாதை திட்டத்தில் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
சனி 2, ஜூலை 2022 12:00:55 PM (IST)

பிரதமர் மோடியை 3வது முறையாக புறக்கணித்த சந்திரசேகர் ராவ்: சின்ஹவுக்கு வரவேற்பு!
சனி 2, ஜூலை 2022 11:56:08 AM (IST)

வயநாட்டில் அடித்து நொறுக்கப்பட்ட எம்பி அலுவலகம் : ராகுல் காந்தி பார்வையிட்டார்
வெள்ளி 1, ஜூலை 2022 5:28:24 PM (IST)
