» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ்நாடு முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்...!

சனி 4, டிசம்பர் 2021 5:08:05 PM (IST)

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 88.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1933 ஆம் ஆண்டு பிறந்த ரோசய்யா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் 2009-2010 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்துள்ளார். மேலும், 2014-ம் ஆண்டில் கர்நாடக பொறுப்பு கவர்னராகவும் செயல்பட்டுள்ளார். 

தமிழ்நாட்டின் கவர்னர் பதவியில் இருந்து 2016-ல் ஒய்வு பெற்றதை அரசியல் களத்தில் இருந்து விலகி ஆந்திராவில் உள்ள தனது குடும்பத்தினருடன் ரோசய்யா வாழ்ந்து வந்தார். அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக ரோசய்யா இன்று உயிரிழந்தார். ரோசய்யாவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory