» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசு வாகனங்களை மின் வாகனங்களாக மாற்ற வேண்டும்: மத்திய மின்சக்தி துறை அமைச்சர்

வெள்ளி 27, ஆகஸ்ட் 2021 4:28:29 PM (IST)

அரசு வாகனங்களை மின் வாகனங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மின்சக்தி துறை அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்றக்கோரி மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் கடிதம் எழுதியுள்ளார்.

இத்தகைய நடவடிக்கை பொது மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். அதோடு மக்கள் மின்வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தொடங்கியுள்ள ‘மின் எரிபொருளுக்கு’ மாறும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Aug 27, 2021 - 05:54:00 PM | Posted IP 108.1*****

அரசு ஓட்டை வண்டிகள் இன்னும் ஓடிட்டு இருக்கிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory