» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொது இடங்களிலல் பிச்சை எடுக்க தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 27, ஜூலை 2021 4:33:39 PM (IST)

பொது இடங்களிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதை தடுக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கரோனா காலத்தில் வீடற்றவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் மறுவாழ்வு திட்டங்களை அளிக்கக் கோரியும், தடுப்பூசி செலுத்த கோரியும் டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா, பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்தமனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. 

அப்போது பொது இடங்களிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது ஒரு சமூக-பொருளாதார பிரச்சினை என்றும் ஏழ்மை  மட்டும் இல்லையென்றால் யாரும் பிச்சை எடுக்க விரும்ப மாட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்தனர். 

மேலும் இந்த பொதுநல மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும் தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் பிச்சை எடுப்பவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory