» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புனேவில் தனியார் ரசாயன ஆலையில் தீ விபத்து: 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

செவ்வாய் 8, ஜூன் 2021 11:57:00 AM (IST)



புனேவில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மராட்டிய  மாநிலம் புனே அருகில் உள்ள பிரன்கட் பகுதியில் எஸ்.வி.எஸ். அக்வா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இது தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படும் குளோரின் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையில் பெண்கள் அதிக அளவில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கம்பெனியில் நேற்று பிற்பகல் திடீரென  ஒரு மெஷின்  வெடித்து தீவிபத்தி ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ முழுவதுமாக அனைத்து பகுதிக்கும் பரவிவிட்டது. இந்த தீவிபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மேலும் ஆலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது.சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட துணை முதல்வர் அஜித் பவார், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory