» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தினசரி கரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது : மத்திய சுகாதார அமைச்சகம்

வெள்ளி 28, மே 2021 11:24:15 AM (IST)

இந்தியாவில் புதிதாக பதிவாகும் தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதன் மூலம், இந்தியாவில் கரோனா 2-ஆவது அலையின் தாக்கம் குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு வியாழக்கிழமை 2.11 லட்சமாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 1.86 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த 44 நாள்களில் இல்லாத அளவாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.  24 மாநிலங்களில் கடந்த வாரம் முதல் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதன் மூலம் கரோனா 2-ஆவது அலையின் தாக்கம் குறைந்து வருவது தெரிகிறது.

பல மாநிலங்களில் அமலில் இருக்கும் பொது முடக்கம் குறிப்பிடத்தக்க அளவு தளா்த்தப்பட்டாலும், புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் நிலையாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.75 கோடி (2,75,55,457) ஆகவும் அதிகரித்துள்ளது. 

ஒரே நாளில் கரோனா தொற்றால் 3,660 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,18,895 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 23,43,152 பேராகவும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 2,59,459 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,48,93,410 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் 90.34 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

வராந்திர தொற்று பாதிப்பின் விகிதம் தற்போது 10.42  சதவீதமாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 9.00 சதவீதமாகவும், தொடர்ந்து 4 நாள்களாக பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் கீழ் இருந்து வருகிறது.கரோனா பரிசோதனையின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளதால், கடந்த 3 வாரங்களாக புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாவோா் விகிதம் குறைந்து வருகிறது. 

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 27 -ஆம் தேதி வரை 33,90,39,861 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. வியாழக்கிழமை ஒரேநாளில் அதிகபட்சமாக  20,70,508 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை  20,57,20,660 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory