தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி கமலா நேரு காலனியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் சங்கிலிபாண்டி(29). இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டரை வைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு இவரது பைக்கை கீழ சண்முகபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் பெருமாள் மதுபோதையில் உடைத்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி சங்கிலிபாண்டி அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பெருமாள், சங்கிலிபாண்டியை அவதூராக பேசி பீர் பாட்டிலை உடைத்து மார்பு மற்றும் கழுத்து பகுதியில் குத்திவிட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சங்கிலிப்பாண்டியை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பெருமாளை தேடி வருகின்றனர்.

