தூத்துக்குடி டூவிபுரம் பிரதான சாலையில் நீண்ட நாட்களாகக் குண்டும் குழியுமாக இருந்த பகுதி மற்றும் குடிநீர் குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட சாலைப் பகுதி புதிதாகத் தார் சாலையாகச் சீரமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டூவிபுரம் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள குழிவுகளையும் குடிநீர் குழாய் உடைப்பையும் சீர் செய்து புதிய சாலை அமைக்க வேண்டும் என நமது இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்களின் உத்தரவின் பேரில், டூவிபுரம் பிரதான சாலை மற்றும் 2-வது தெருவில் உடனடியாகப் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுச் சாலை புதுப்பிக்கப்பட்டது.
நீண்ட நாட்களாகப் போக்குவரத்துக்கும் நடைபயிற்சிக்கும் இடையூறாக இருந்த சாலை தற்போது புதிய தார் சாலையாக மாற்றப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோரிக்கையை ஏற்றுச் விரைந்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

