தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினசரி சுழற்சி முறையில் விசைப்படகுகளில் கடலுக்குள் மீனவர்கள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீன்களை தூத்துக்குடி மற்றும் கேரளா மீன் வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை ஏலம் எடுப்பது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக கேரள மீன் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது.

மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.