தூத்துக்குடி புதுத்தெருவைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் லூக்காஸ் கிளின்டன் (44). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் பூபால்ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவபிரசாத் உத்தரவின் பேரில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடபாகம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களை அச்சுறுத்திய லூக்காஸ் கிளின்டனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.