தூத்துக்குடியை சேர்ந்த நவீன் (20), அவரது நண்பர் மாரிமுத்து (24) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் செல்வது போன்று வீடியோ பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரீல்ஸ் வெளியிட்ட நவீன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கைதான 2 பேரும் மன்னிப்பு கோரி புதிதாக வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோவில், நாங்கள் தெரியாமல் ரீல்ஸ் போடுவதற்காக அரிவாளை காட்டி வீடியோ வெளியிட்டுவிட்டோம். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். எங்களை மன்னித்து விடுங்கள்.

இதுபோன்ற செயல்களை இனிமேல் நாங்கள் செய்யமாட்டோம் என்றும் வீடியோ வெளியிட்டு உள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.