தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் ஆ. ராஜா (46) உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமானார்.

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த ராஜா (46), கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 4:00 மணி அளவில் அவர் உயிரிழந்தார். மறைந்த காவலர் ராஜாவின் இறுதிச்சடங்குகள் மற்றும் நல்லடக்கம் நாளை தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.