தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆ. ஜெயாசண்முகம் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியை கௌரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு வகுப்பு வாரியாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களைப் பாராட்டிப் பள்ளியின் முதல்வர் ஆ. ஜெயாசண்முகம் பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பள்ளியின் பழைய மாணவ, மாணவியர் சங்கத் தலைவர் ரா.ச. பிரியங்கா மற்றும் முன்னாள் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் ஆசிரியை சங்கர ஆவுடையாச்சி நன்றி கூறினார். நிகழ்ச்சி நிரலை ஆசிரியை பொன் ஜென்சி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியைகள் சிறப்பாகச் செய்திருந்தனர். தேசிய கீதத்துடன் குழந்தைகள் தின விழா இனிதே நிறைவுற்றது.