தூத்துக்குடி கோட்ஸ் நகர் 5வது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கபில்தேவ் (25) என்பவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் NDPS சட்டம் பிரிவு 8(C) r/w 20(b)(ii) B-ன் கீழ் (Crime No. 971/26) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தென்பாகம் காவல் நிலையத்தின் ‘பி’ பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் கபில்தேவின் தொடர் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகளின் பரிந்துரையின்பேரில் குண்டர் தடுப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கான ஆணை கடந்த 12.11.2026 அன்று பெறப்பட்டு, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று, அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதி கபில்தேவிடம் குண்டர் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையை முறையாக வழங்கினார்.