இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அகில இந்திய கோழியர் இராஜ்ஜியம் மாநிலத் தலைவர் ஆனந்தராஜ் அனுப்புயிள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் செந்தியம்பலத்தில் செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலையக் கட்டடம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த காரணத்தால் இடிக்கப்பட்டது. ஆனால், கட்டடம் இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை புதிய கட்டடம் கட்டுவதற்கான எந்தவொரு பணியும் தொடங்கப்படவில்லை.
இதனால் செந்தியம்பலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடிப்படை மருத்துவ வசதியின்றிப் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி மற்றும் அவசர சிகிச்சைக்காகப் பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது.
எனவே, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, செந்தியம்பலம் துணை சுகாதார நிலையத்திற்குப் புதிய கட்டடம் கட்டித் தர சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு கிராம பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.

