வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை 8:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், வேதிகார்ச்சனை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ ருத்ர ஸுக்த ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி மற்றும் மகாபிஷேகம் ஆகியவை மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து காலை 9:30 மணியளவில் திருக்கோவில் விமானத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் காலை 11:30 மணியளவில் பஞ்சமுகார்ச்சனை, சிறப்பு தீபாராதனை மற்றும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

மாலையில் மங்கள வாத்தியத்தைத் தொடர்ந்து 6:30 மணிக்குத் திருமுறை பாராயணம் நடைபெறுகிறது.. இரவு 7:30 மணிக்கு வெள்ளி வாகனத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு, இரவு 8:00 மணிக்குச் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு பாலிக்கிறார்.

tutusivanvarush.jpg

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் அறங்காவலர் குழு, திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அம்மையப்பர் பக்த சேவா சங்கத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.