தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாத் தேரோட்டத்தை முன்னிட்டு, நாளை (நவம்பர் 3) நகரின் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாத் தேரோட்டம் நாளை (03.11.2026) காலை 08.00 மணியளவில் சிறப்பாக நடைபெற உள்ளது.
இதனையொட்டித் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை காலை 07.30 மணி முதல் மதியம் 03.00 மணி வரை டூவிபுரம், சண்முகபுரம் மற்றும் பீச்ரோடு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட 22 KV சிவன் கோவில் உயரழுத்த மின்தொடரில் மின்னூட்டம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
ரெங்கநாதபுரம்,சிவன்கோவில் தெரு,பெருமாள் கோவில் தெரு, ரத வீதிகள், தெப்ப குளம் தெரு,கிப்சன்புரம்,T.ராமசாமி தெரு, வஉசி ரோடு,செல்விஜர் தெரு,WGC ரோடு,பள்ளிவாசல் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேரோட்டம் பாதுகாப்பாக நடைபெற மின்வாரியம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கும் மின் விநியோகத் தடைக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

