தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் தேவிகுமார் (43). கடந்த 2020-ஆம் ஆண்டு கடும் கடன் தொல்லையால் அவதியுற்று வந்த தேவிகுமார், மன உளைச்சல் காரணமாகத் தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார்.

இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தேவிகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் (ADJ-I) நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி தாண்டவம் இன்று (02.11.2026) தீர்ப்பளித்தார்.

தேவிகுமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.