தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ சார்பில் ஆவணி மாத சிறப்பு பரிசு திட்டத்தின் கீழ் தங்கம் வாங்கிய மணமக்களுக்கு குலுக்கல் முறையில் டி.வி.எஸ். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கே.சின்னத்துரை அன் கோ தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஏரலைச் சேர்ந்த சல்மா ஜப்ரி - சலீனா ஜோஸ், திருச்செந்தூரைச் சேர்ந்த சிவக்குமார் - வனிதா, தூத்துக்குடியைச் சேர்ந்த நந்தினி ஸ்ரீ -ஆனந்த், திருநெல்வேலியைச் சேர்ந்த மாலதி ஆகியோர் குலுக்கலில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற 4 மணமக்களுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனத்தின் பங்குதாரர் ஹரிராமகிருஷ்ணன் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியை ராஜா பேச்சிமுத்து தொகுத்து வழங்கினார். சந்தோஷ் வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே.சின்னத்துரை அன் கோ மேலாளர் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

