திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்வு கூட்டம் 23.11.2026 தேதி அன்று மாலை 5:00 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள் / தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் ச.வித்யா தெரிவித்துள்ளார்.