தூத்துக்குடி மடத்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் பால்ராஜ் (27). இவருக்குக் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமான மறுநாள் காலையில் ஆண்ட்ரூஸ் பால்ராஜ் திடீரென விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டின் முன்பகுதியில் கை மற்றும் கழுத்தில் காயங்களுடன் மயங்கிக் கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டுத் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஆண்ட்ரூஸ் பால்ராஜ் உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் மற்றும் அவரது உடலில் இருந்த காயங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

