திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இன்று (நவம்பர் 25) வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகள் மற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, காவல் கட்டுப்பாட்டு அறையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் அன்றாடப் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு விரிவாக ஆய்வு செய்து, காவல்துறையினருக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து, அங்கிருந்த ஒருங்கிணைந்த சி.சி.டி.வி. கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறையினை நேரில் பார்வையிட்ட அவர், நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், கண்காணிப்புப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

இந்த வருடாந்திர ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத், தூத்துக்குடி நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சுனில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.