திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா, ஆடித்திருவிழா மற்றும் நவராத்திரி திருவிழா உள்ளிட்ட பல்வேறு முக்கிய உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதன்படி, இவ்வாண்டிற்கான நவராத்திரி திருவிழா கடந்த அக்டோபர் 11-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. தினமும் அம்மனுக்குப் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் 5-ம் நாளான நேற்று, துர்க்கா பரமேஸ்வரி அம்மனுக்கு 'வராஹி அன்னை' அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் கூடிய சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன.

இச்சிறப்பு வழிபாட்டில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.