திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் நடைபெற்ற கொடூரச் சம்பவங்களைப் பட்டியல் இட்டுள்ளார்:

சென்னை: மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை.

திருத்தணி: மகளுக்குத் தொல்லை கொடுத்தவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்த தந்தை, வீட்டின் முன்பே படுகொலை.

சேலம்: வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் என்ற மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை மற்றும் நகை கொள்ளை.

திண்டுக்கல்: சாணார்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பிய வீரபத்திரன் என்பவர் மனைவி கண்முன்னே வெட்டிக் கொலை.

மதுரை & சோழவந்தான்: சமயநல்லூர் அருகே இளைஞர் கொலை; சோழவந்தான் டாஸ்மாக் அருகே சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை.

எண்ணூர்: ரயில் நிலையத்தில் மாணவர்கள் மீது வெட்டுக்காயத் தாக்குதல் முயற்சி.

தமிழகத்தில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்கு அரிவாள் வெட்டு தலைதூக்கியுள்ளது. காவல்துறையினரால் ரோந்துப் பணி முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்தாமல், 'Shooting Mode'-இல் இருந்து விடுபட்டு மக்கள் பாதுகாப்பிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.