இது குறித்து அவர் கூறியதாவது: "தேர்தல் ஆணையம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படும் ஒரு சுதந்திரமான மக்களுக்கான அமைப்பாகும். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.
ராகுல் காந்தி மாவட்ட அளவிலான போராட்டங்களை நடத்தி, வாக்களிக்கும் உரிமை குறித்து மக்களிடம் இருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைக்க முயல்கிறார். தேர்தல் ஆணையம் பாஜகவிற்காக மட்டுமே செயல்படுகிறது என்றும், அது சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது என்றும் பொய்யான கருத்துகளை திட்டமிட்டு ராகுல் காந்தி பரப்பி வருகிறார்.
எஸ்.ஐ.ஆர் படிவங்கள் மூலம் தகுதியான வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளனர்; தகுதியற்ற பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பெயர் சேர்க்கை மற்றும் திருத்தங்கள் குறித்து மக்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, மக்கள் முறையீடு செய்யவும் தகுந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இருப்பினும், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறி, இந்தியாவின் தேர்தல் முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்து வருகின்றன" என அவர் தெரிவித்துள்ளார்.

