தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒருநாள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 6- வயதுக்குட்பட்ட காது கேளாத, வாய்பேசாத மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் 60 பேர் இச்சுற்றுலாவில் பங்கேற்றேனர். குழந்தைகளுடன் சிறப்பாசிரியர்கள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்லும் அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒருங்கிணைந்து சிற்றுண்டி, குடிநீர் மற்றும் மதிய உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. ஜெயபிரகாஷ் அவர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர் நித்யகல்யாணி, பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

