பள்ளித் தலைமை ஆசிரியரும் முகாம் தலைவருமான நாகலிங்கம் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் கோச்சிமின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கோவில்பட்டி முத்தமிழ் மன்ற அறக்கட்டளைச் செயலாளரும் நன்னெறி ஆசிரியருமான லயன் பிரபு, "போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகளும் சமூகச் சீரழிவுகளும்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் முதல்வர் காமராஜ் மற்றும் கழுகுமலை கம்மவார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரேவதி ஆகியோர் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்துக் வினா-விடை முறையில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் லயன் பிரபு பள்ளி நூலகத்திற்காகப் பயனுள்ள நூல்களைப் பரிசாக வழங்கினார். இச்சிறப்பு நிகழ்வின் நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரமேஷ் நன்றியுரையாற்றினார். முகாமில் திரளான என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

