கிராமப்புறப் பெண்கள் சமூகக் கல்வி மையம் (RUWSEC) மற்றும் உயிர் பல்லுயிர் பெருக்கம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் (Action for Biodiversity and Community Development) இணைந்து, “கலிடோஸ்கோப் முன்னெடுப்பு - அனைவருக்கும் RHR-ஐ மீட்டெடுத்தல்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

இந்நிகழ்ச்சிக்கு MMSS நிறுவன அலுவர் முத்துமாரி வரவேற்புரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் பொறுப்பு முதல்வர் கிரேஸ் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோகுல், வழக்கறிஞர் சின்னதுரை, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திலகா, One Stop Centre நிர்வாகி பொன்னுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பெண்களின் உடல்நலம், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான சிறப்புரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.

ABCD இயக்குநர் மன்னர் மன்னன், “பாதுகாப்பான தேர்வுகள் - ஆரோக்கியமான வாழ்க்கை - சமத்துவமான எதிர்காலங்கள்" என்ற செய்தியை முன்வைத்து, பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு சரியான தகவல், பாதுகாப்பான சுகாதார சேவைகளை அணுகுதல், தனியுரிமை, மரியாதை மற்றும் உரிமைகள் குறித்து அங்கன்வாடிபணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான பங்கேற்பு அடிப்படையிலான பயிற்சி அளித்தார்.

பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் (SRHR) குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், பாதுகாப்பான மற்றும் உரிமை அடிப்படையிலான சுகாதார சேவைகளை அணுகுவதற்கான புரிதலை வலுப்படுத்தும் வகையில் துளசி நிறுவனம் தனலட்சுமி, மற்றும் ஓட்டப்பிடாரம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் உதவியாளர் பரத் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் அமுதம் நிறுவனம் வனிதா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ABCD நிறுவனப் பணியாளர்கள் ஜோதி, சாலினி மற்றும் சுபலஷ்மி ஆகியோர் செய்திருந்தனர்.