கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் 16.11.2026 முதல் 20.01.2027 வரை நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து பம்பாவிற்கு 4 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நாகர்கோவிலில் இருந்து தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, அடூர், பத்தனம்திட்டா, நிலக்கல் வழியாகப் பம்பாவிற்கு இந்தப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேற்படி பேருந்துகள் முறையே நாகர்கோவிலில் இருந்து 19.00, 19.30, 20.00, 20.30 மணிக்கு புறப்பட்டு, மார்த்தாண்டத்தில் இருந்து 20.00, 20.30, 21.00, 21.30 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரத்தில் இருந்து 22.00, 22.30, 23.00, 23.30 மணிக்கு புறப்பட்டு பம்பாவிற்கு 03.00, 03.30, 04.00, 04.30 மணிக்கு சென்றடையும்.
அதனை போன்று பம்பாவில் இருந்து காலை 07.00, 07.30, 08.00, 08.30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்தில் இருந்து 12.00, 12.30, 13.00, 13.30 மணிக்கு புறப்பட்டு, மார்த்தாண்டத்தில் இருந்து 14.00, 14.30, 15.00, 15.30 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலுக்கு 15.00, 15.30, 16.00, 16.30 மணிக்கு வந்தடையும்.
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, 27.12.2026 முதல் 30.12.2026 அன்று மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் 26.12.2026 முதல் 29.12.2026 வரை இச்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது.
மேலும், பயணிகள் இச்சிறப்பு பேருந்துகளை "www.tnstc.in" என்ற இணையதளம் வாயிலாகவும், TNSTC Official app மூலமாகவும் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்துகளின் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9487599082, 9487599083 மற்றும் 7598532599 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (திருநெல்வேலி) மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

