செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி கிராமத்தில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் வரை பல்வேறு நிலைகளில் உள்ள காவல்துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தன் (56), அங்குள்ள உணவகத்தில் பணிபுரியும் 16 வயது சிறுவனுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். காவல்துறை உயர் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்ட நிலையில், பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த வசந்தன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

