மதுரை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட நேர வழித்தடத் தடை (Fixed Time Corridor Block) அமல்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாகக் குருவாயூர் - சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் - கோவை ரயில்களின் வழித்தடம் மற்றும் நிறுத்தங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16128)
அக்டோபர் 11, 13, 15, 20, 22, 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்குக் குருவாயூரில் இருந்து புறப்படும் குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கமான பாதைக்கு பதிலாக விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாகத் திருப்பி விடப்பட்டு இயக்கப்படும்.
ரத்து செய்யப்படும் நிறுத்தங்கள்: மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை.
நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 16321):
அக்டோபர் 12, 14, 16, 21, 23, 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 8.00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
ரத்து செய்யப்படும் நிறுத்தங்கள்: திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாலையம்.
கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி.
பராமரிப்புப் பணிகள் காரணமாக வழித்தட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிடும் முன் ரயில்வேயின் மாற்றப்பட்ட கால அட்டவணையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு தென்னக ரயில்வே கோரியுள்ளது.

