அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் செப்டம்பர் 24-ஆம் தேதி வரையிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செப்டம்பர் 25-ஆம் தேதி வரையிலும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும் தேர்வுகள் நடத்தப்படும்.

9 மற்றும் 10-ஆம் வகுப்புத் தேர்வு பாடப்பிரிவு விவரங்கள்:

செப்டம்பர் 16 – தமிழ்

செப்டம்பர் 17 – ஆங்கிலம்

செப்டம்பர் 18 – விருப்பப் பாடம்

செப்டம்பர் 21 – கணிதம்

செப்டம்பர் 22 – உடற்கல்வி

செப்டம்பர் 23 – அறிவியல்

செப்டம்பர் 24 – சமூக அறிவியல்

காலாண்டுத் தேர்வு விடுமுறை:

தேர்வுகள் முடிந்த பிறகு, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.

விடுமுறைக்குப் பின்னர் அக்டோபர் 5-ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.