கடந்த 06.10.2025 அன்று தன்னார்வலர் ஒருவர் சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து அளித்த பென்டிரைவில் (Pen drive), தொழிலதிபர் வீரமணி (84) சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

அந்த பென்டிரைவை ஆய்வு செய்த போலீசார், தொழிலதிபர் வீரமணி சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதி செய்து மறுநாளே (07.10.2025) வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சென்னை தேனாம்பேட்டையில் சாந்தி என்பவருக்கு வீரமணி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சாந்தியும் அவரது கணவர் மகேந்திர சிம்கனும் பல சிறுமிகளை அழைத்து வந்து வீரமணிக்கு விருந்தாக்கியது தெரியவந்தது.

அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் நடத்திய சோதனையில், பல சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் சிக்கின.

ஆதாரங்களின் அடிப்படையில், தொழில் அதிபர் வீரமணியை மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் சிறுமிகளை சப்ளை செய்து வந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரையும் கைது செய்து, மூன்று பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

யார் இந்த வீரமணி?

வக்கீலாக இருந்து தொழிலதிபரான வீரமணி, இந்தியாவில் முதன்முதலாகக் கிரானைட் குவாரி தொழிலில் சர்வதேசத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர். 1983-இல் அகில இந்திய கிரானைட் கூட்டமைப்பை உருவாக்கி அதன் முதல் தலைவராகவும், உலக இயற்கை கல் சங்கத்தின் தலைவராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.